ஆளுமை:கணபதிப்பிள்ளை, வெள்ளையன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை வெள்ளையன்
தாய் வள்ளியம்மை
பிறப்பு
ஊர் கோட்டைக் கல்லாறு, மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, வெள்ளையன். மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வெள்ளையன்; தாய் வள்ளியம்மை. கோட்டைக்கல்லாறு மெதடிஸ் மிசன் பாடசாலையிலும், கல்லாறு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்ற இவர், கரடியனாறு விவசாய சாதனா பாடசாலையிலும், குண்டசாலை விவசாயப் பயிற்சி கல்லூரியிலும் பயிற்சி பெற்று விவசாயப் போதனாசிரியராகப் பணி செய்தார்.

1987 இற்குப் பின்னர் கனடாவில் குடியேறிய இவர், அங்கு இருபாங்கு மரபுக் கூத்துக்களைப் பயிற்றுவித்து மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்தார். இவர் 'கனடா வந்த கண்ணம்மை', 'ஒடுக்கப்பட்ட ஒதியமலை' ஆகிய கூத்துக்களை ஆக்கியுள்ளதோடு அவற்றை நெறியாள்கையும் செய்துள்ளார். இவர் கோட்டையூர் மதங்கன் என்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 174-176