ஆளுமை:கனகரத்தினம், இளையதம்பி

From நூலகம்
Name கனகரத்தினம்
Pages இளையதம்பி
Birth 1946.03.12
Place கோப்பாய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரத்தினம், இளையதம்பி (1946.03.12 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. இவர் 15 வயதிலிருந்து நடிப்பு, பாடல், பேச்சு வன்மை, கவிதை போன்ற துறைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

பாத காணிக்கை, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பாம விஜயம், பண்டார வன்னியன், சங்கிலியன், ஏழையின் காதல், மரகதபுரி மாலா இவரது சரித்திர நாடகங்கள். தொடர்ந்த கதை முடிவதில்லை, நிமிடங்கள் நினைக்கின்றன பயணங்கள் முடிவதில்லை போன்ற இவரது சமூக நாடகங்கள். இவை அரியாலை, நாவாந்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கண்டி போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.

இவரது திறமைக்காகக் கலைக்கிரீடம், கலாச்சாரப் பேரவையால் கலைச்செல்வன், மரபு வழி நாடகத்துறையினரால் மரபு வழிக் கலைஞர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 144