ஆளுமை:கனகலிங்கம், பரராஜசிங்கம்

From நூலகம்
Name கனகலிங்கம்
Pages பரராஜசிங்கம்
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகலிங்கம், பரராஜசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூக சேவையாளர், கூட்டுறவாளர். இவரது தந்தை பரராஜசிங்கம்.சிறந்த சமூகத் தலைவர், பத்திரிகையாளராக இருந்த இவர், தான் சார்ந்திருந்த கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்தத் தீவகக் கூட்டுறவு ஒன்றியத்தை அமைத்தார்.

1998 ஆம் ஆண்டு தொடக்கம் புங்குடுதீவு- நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகப் பணியாற்றியதோடு 1991 ஆம் ஆண்டு யாழ். மாவட்டப் பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒன்றியம் அமைக்கப்பட்டவேளை அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினார். அத்தோடு 2003 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவையின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டு 1995-2002 காலப்பகுதியில் வன்னியில் அரசியல், கூட்டுறவு, கல்வி, மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரும்பணியாற்றினார்.

பிரகாஸ், கலி என்ற புனைபெயர்களில் பல அரசியல், கூட்டுறவுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், 1983 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து சந்திப்பு என்ற சஞ்சிகையையும் 1997 முதல் 2002 வரை கிளிநொச்சியிலிருந்து சங்கமம் என்ற கூட்டுறவு சார்ந்த பத்திரிகையையும் வெளியிட்டார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 213-214