ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, கணபதிப்பிள்ளை
From நூலகம்
Name | கிருஷ்ணபிள்ளை |
Pages | கணபதிப்பிள்ளை |
Birth | 1898.01.10 |
Pages | 1956 |
Place | பொன்னாலை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருஷ்ணபிள்ளை, கணபதிப்பிள்ளை (1898.01.10 - 1956) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் தனது கல்வியைச் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் பயின்றார். இவர் சிறுபராயத்தில் அவ்வூர் வைத்தியராகவிருந்த அண்ணாவி சுப்பிரமணியம் என்பவரை அணுகி, அவரிடம் இசை பயின்றதோடு நாடகம் நடிப்பதிலும் ஈடுபட்டார்.
இவர் பாடிய பல கீர்த்தனைப் பாடல்களில் இருநூறு சாகித்தியங்களே பிரபலமானவை. இவை பொன்னாலை வரதராஜப் பெருமாள், பறாளாய் முருகன், வழக்கம்பராய் அம்பாள், வல்லிபுர ஆழ்வார் ஆகிய தெய்வங்கள் மீது பாடப்பட்டவையாகும். இவர் தயாரித்த இசை நாடகங்களில் கிருஷ்ண லீலா, ஹம்சன் வதம், எது நல்லவழி, சுதேம்விதேசம் என்பவை சிறப்பானவையாகும்.
Resources
- நூலக எண்: 7474 பக்கங்கள் 01-05
- நூலக எண்: 15444 பக்கங்கள் 147