ஆளுமை:கிறிஸ்தோப்பர், கிறகோரி

From நூலகம்
Name கிறிஸ்தோப்பர்
Pages கிறகரி
Birth 1949.06.08
Place குருநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்தோப்பர், கிறகரி (1949.06.08 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகரி. 1966 ஆம் ஆண்டு குருநகர் நெய்தல் வளர்பிறை மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட இதயக்குமுறல் நாடகத்தில் நடித்ததன் மூலமாக இவருடைய கலைப்பயணம் ஆரம்பமானது.

1970 ஆம் ஆண்டு 48 உறுப்பினர்களைக் கொண்ட குருநகர் நெய்தல் வளர்பிறை மன்றத்தினை வழிநடத்தியுள்ளார். இவர் வள்ளல் பாரி, நந்திவர்மன், செந்தூது, மலைமேற் கொலை, பண்டார வன்னியன் நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து பல கலைஞர்களை உருவாக்கியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேசிய நாடக விழாவில் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைஞர்களை ஒன்றிணைத்துப் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தினை இவர் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக வடக்கு- கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் மரபுக் கலைச்சுடர், யாழ்ப்பாணப் பிரதேச கலாச்சாரப் பேரவையால் யாழ்ரத்னா முதலிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 149