ஆளுமை:மாஹிரா, சிராஜ்

From நூலகம்
Name மாஹிரா
Pages தாவூத் ஜெய்லாப்தீன்
Pages ஜீனத்தும்மா
Birth 1992.05.05
Place வத்தேகெதர
Category எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாஹிரா, சிராஜ் கண்டி உடத்தலாவின்னையில் பிறந்த எழுத்தாளர். இவரின் தந்தை தாவூத் ஜெய்லாப்தீன் தாய் ஜீனத்தும்மா. ஆரம்பக் கல்வியை வத்தேகெதர அல்-ஸபா மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை உடத்தலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்தியக் கல்லூரியிலும் கற்றார். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்துத்துறைக்குள் பிரவேசித்து மாகாணம், அகில இலங்கை ரீதியில் பல பரிசில்களை பெற்றுள்ளார்.

கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் எழுத்து டொக்கொம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன. விடிவெள்ளி நாளிதழிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ஊனமில்லா உறவோடு எனும் சிறுகதைத் தொகுதி ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.


வெளி இணைப்புக்கள்