ஆளுமை:அடைக்கலமுத்து, சூசை

From நூலகம்
Name அடைக்கலமுத்து
Pages சூசை
Birth 1932.04.28
Place கரம்பன்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அடைக்கலமுத்து, சூசை (1932.04.28 - ) யாழ்ப்பாணம் கரம்பனைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சூசை. சிறுவயதிலிருந்து ஓவியத் துறையில் நாட்டங்கொண்டு முறையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

நாடக அரங்குகளில் பின்புலக் கலைஞராகச் செயற்பட்ட இவர், காட்சியமைப்புக்களை மிக நுட்பமாகக் கையாண்டு நாடகங்களுக்குப் பங்களித்துள்ளார். திருமறைக் கலாமன்றத்தில் 1960 இல் இணைந்து ஓவியக் கலைக்குப் பணியாற்றி வரும் இவர், அம்மன்றத்தின் பிரமாண்டமான நாடக நிகழ்வுகளுக்குப் பெரும் காட்சிகளை வரைந்தும் அமைத்தும் பங்களித்துள்ளார். எழுத்தோவியம், வர்ணக்கலை ஓவியம், ஆலயங்களின் சுவர் சித்திரம், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையிலும் செய்து வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 189
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 232