ஆளுமை:அம்பிகைபாகன், சங்கரப்பிள்ளை

From நூலகம்
Name அம்பிகைபாகன்
Pages சங்கரப்பிள்ளை
Pages சிவகாமசுந்தரி
Birth 1908.05.03
Place சுன்னாகம்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகைபாகன், சங்கரப்பிள்ளை (1908.05.03 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை; தாய் சிவகாமசுந்தரி. மல்லாகம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிகளில் கல்வி கற்ற இவர், சென்னை பிரெசிடென்சிக் கல்லூரியில் பீ. ஏ பட்டம் பெற்றார். 1933 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தருடன் ஏற்பட்ட தொடர்பினால் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியப் பதவி பெற்றுப் பணியாற்றினார். ஈராண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் அதிபராக இராமகிருஷ்ண சபையினால் அனுப்பப்பட்டார்.

பல நூல்களுக்கு ஆசிரியரான இவர் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பித்த "ஈழநாடும் தமிழ்ச்சங்கங்களும்" என்ற கட்டுரை அனைவரினதும் பாராட்டைப் பெற்றது. 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கியும் கட்டுரை சமர்ப்பித்தும் பாராட்டைப் பெற்றார். நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் துணைத்தலைவராக பங்குவகித்தவர். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உருவாகுவதற்குப் பெருமுயற்சி எடுத்தவர் இவரே. இவரால் விபுலானந்தர் என்ற நூலும் வெளியிடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 31-37

வெளி இணைப்புக்கள்