ஆளுமை:அற்புதம், சீமான்

From நூலகம்
Name திருமதி அற்புதம்
Pages சீமான்
Birth 1954.10.05
Place கிளிநொச்சி, வலைப்பாடு
Category கூத்துக்கலைஞர்,அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி அற்புதம், சீமான் அவர்கள் (1954.10.05 - ) கிளிநொச்சி, வலைப்பாடு கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக்கலைஞர். 1961 ஆம் ஆண்டு தன் தந்தையின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட விசயமனோகரன் நாடகத்தில் கட்டியக்காரன் பாத்திரத்தினை வழங்கி கூத்து கலைக்குள் கால்பதித்தார். ஒன்பது வயது சிறுமியாக கட்டியக்காரன் பாத்திரம் ஏற்று திறம்பட ஆடலையும், பாடலையும் வெளிப்படுத்தி மக்கள் பாராட்டுக்களையும் தந்தையின் ஆசிகளையும் பெற்றுகொண்டார்.

இவர் மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் திருமணமாகி அந்த கிராமத்தில் வசித்து வந்தார். தனது தந்தையின் விசயமனோகரா, பொன்னூல் செபமாலை, எஸ்தாக்கியர், தர்மபிரகாசர், ஞானசவுந்தரி போன்ற நாட்டுக் கூத்துக்களின் பழக்கங்களையும் மேடையேற்றங்களையும் நேரடியாக பார்த்தார்.

இவர் தந்தைக்கு ஒத்தாசையாக இருந்து பெற்றுக் கொண்ட அனுபவங்களை 1991 ஆம் ஆண்டு ஞானசவுந்தரி நாடகத்தை கொப்பிகள் எதுவுமின்றி தேவன்பிட்டி கலைஞர்களுக்கு பழக்கி தந்தையின் பிரசன்னத்தில் அரங்கேற்றினார். இவருடைய மகள் அருள்ரஞ்சினி அவர்களும் தாயின் கூத்து பழக்கங்களில் கொப்பி பார்த்தல், இசை அமைத்தல் நடைப்பழக்கம் என்பவற்றில் ஒத்தாசையாக இருந்தார். கூத்துக் கலையில் பெண்களின் பங்கு நடிப்பிலும், இதர உதவிகளைச் செய்வதிலும் மட்டுமல்லாது எழுத்து, இசை அமைப்பு, நாடக நெறியாள்கை என்று பரந்துபட்ட களமாக விரிந்து செல்வது தமிழரின் கலைக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.