ஆளுமை:அற்புதராணி, காசிலிங்கம்

From நூலகம்
Name அற்புதராணி, காசிலிங்கம்
Pages இராசரத்தினம்
Pages செல்வச்சிகாமனி
Birth -
Pages -
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அற்புதராணி, காசிலிங்கம் (1957.12.06) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசரத்தினம்; செல்வச்சிகாமனி. யாழ் மான்ப்பாய் மகளிர் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி கற்றுள்ளார்.

1993ஆம் ஆண்டிலேயே இவர் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த பருந்தின் பசி என்னும் சிறுகதையே இவரது முதலாவது படைப்பாகும். தொடர்ந்து கனவுகள் நனவாகும் என்ற 43 அங்கங்கள் கொண்ட தொடர் நாடகம் இலங்கை வானொலியில் வெளியானது. இவரது 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மற்றும் சில குறுநாவல்களும் காணாமல் போன நிலையில் எஞ்சிய படைப்புக்களான மறையாத சூரியன், மௌனத்தின் சிறகுகள், மலைச்சாரலின் தூவல் போன்ற நாவல்களையும் வேர்பதிக்கும் விழுதுகள், கீறல், அனலிடைப்புழு, தேட்டம் போன்ற சிறுகதை தொகுப்புக்களையும் நூலாக வெளியிட்டுள்ளார். இவரது நேர்காணல்கள்ஜீவநதி, தளவாசல் போன்ற் சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. மேலும் இவரது படைப்புக்கள் ஈழநாடு, சிரித்திரன், தாயகம், யுகம், உதயன், சூரியகாந்தி, வலம்புரி போன்ற பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.

மறையாத சூரியன் நாவலுக்கு முத்துமீரான் விருதும் மற்றும் இவரது குறுநாவலுக்கும் நாவலுக்கும் கலாசார அமைச்சின் விருதினையும் பெற்றுள்ளார்.