ஆளுமை:அஹமட் ஹாறூன், முகையதீன் பாவா

From நூலகம்
Name அஹமட் ஹாறூன்
Pages முகையதீன் பாவா
Birth 1970.08.08
Place அம்பாறை
Category ஊடகவியலாளர்


அஹமட் ஹாறூன், முகையதீன் பாவா (1970.08.08 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை முகையதீன் பாவா. இவர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று முனவ்ரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். கலைமாணிப் பட்டதாரியான இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திலும் ஆசிரியையாகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

ஆசிரியராகவும், தினகரன், வீரகேசரி பத்திரிகைகளின் நிருபராகவும் பணியாற்றும் இவரது முதல் செய்தி வீரகேசரி பத்திரிகையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் அக்கரைப்பற்றில் என்னும் தலைப்பில் பிரசுரமானது. குற்றவியல் செய்திகள், அபிவிருத்திச் செய்திகள், சமூகப் பிரச்சனைகள் போன்ற பல செய்திகளை எழுதியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 87-88