ஆளுமை:ஆத்மானந்தா, பொன்னையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 19 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆத்மானந்தா
தந்தை பொன்னையா
தாய் செல்லம்மா
பிறப்பு 1948.02.16
இறப்பு 1986.05.18
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆத்மானந்தா, பொன்னையா (1948.02.16 - 1986.05.18) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா; தாய் செல்லம்மா. இவர் யாழ்ப்பாணம் நந்தி இசைமன்ற நிறுவுனரான மிருதங்கமணி எம். என். செல்லத்துரை என்பாரிடம் மிருதங்க இசையைப் பயின்றார். இவர் கஞ்சிரா, கடம், முகர்சிங், தவில், தபேலா போன்ற வாத்தியங்களையும் வாசிக்கக்கூடியவர்.

1959 இல் ஐயாக்கண்ணு தேசிகர் வித்துவானுக்குப் பின்னணி இசை வழங்கி முதன்முதலாக அரங்கேறினார். இவரது மிருதங்க வாசிப்பு முக்கியமாக முழுச்சாப்பு, கும்காரம், மேற்கால பரண்கள், நாதசுகம், பாட்டுக்களுக்கு வாசிக்கும் முக்கிய அம்சங்கள் நிறைந்தவையாக காணப்பட்டது. சின்னமணி இசைக்குழுவினருடன் 1978 ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று தன் மிருதங்க இசையை வழங்கினார்.

இலங்கை வானொலியிலும் இவரது மிருதங்கக் கச்சேரிகள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன. 1986 ஆம் ஆண்டு புளியங்கூடல் மகா மாரியம்மன் கோவில் உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகளின் ஒலிப்பதிவு நாடாவில் சங்கீதபூஷணம் நா.வி.மு.நவரத்தினம் அவர்களுடைய இசைக்கு மிருதங்கம் பக்க வாத்தியமாக இசைத்தமையே இவரது இறுதி நிகழ்வாக அமைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 111