ஆளுமை:இந்திரகுமார், க.

From நூலகம்
Name இந்திரகுமார்
Birth
Pages 2008.12.21
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரகுமார், க. ( - 2008.12.21) எழுத்தாளர், கலைஞர், மருத்துவர். இவர் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்று மருத்துவர் ஆனார். இலங்கை பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் சட்ட மருத்துவ விரிவுரையாளராகக் கடமையாற்றினார். 1983 இல் புலம்பெயர்ந்து இலண்டன் சென்றார். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த போது வீரகேசரியில் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் 1972 இல் புத்தகமாக வெளிவந்ததுடன் இலங்கையின் அரசு மண்டல சாகித்தியப் பரிசினைப் பெற்றது. டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒர் அறைகூவல், விண்வெளியில் வீர காவியங்கள், இலங்கேஸ்வரன், தீ மிதிப்பும் எரிகின்ற உண்மைகளும் ஆகியன இவரது ஏனைய நூல்கள். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற இவர், இரண்டு மொழிகளிலும் பல நூல்களை ஆக்கியுள்ளார். மறைந்த தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50ற்கு 50 என்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உரையை ஆங்கிலத்தில் நூலாக்கினார். இவர் வாடைக்காற்று திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இவரது புதுயுகம் கண்டேன் நூல் தினகரன், வார மஞ்சரி ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 447-449
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 126-130