ஆளுமை:இந்திராசா, ஆறுமுகம்

From நூலகம்
Name இந்திராசா
Pages ஆறுமுகம்
Birth 1955.03.25
Place வட்டுவாகல், முல்லைத்தீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராசா, ஆறுமுகம் (1955.03.25) வட்டுவாகல், முல்லைத்தீவைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம்; 1973ஆம் ஆண்டு கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் தரம் ஐந்து வரை கல்வி கற்றார்.

நாடகாசிரியர், நாட்டுக்கூத்து, கவிதை எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். இவர் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். வட்டுவாகல் சப்தகன்னிமார் புகழ்பாடும் பாடல்களை உருவாக்கி 2012ஆம் ஆண்டு இசைமாலை என்னும் பெயரில் இறுவட்டாக்கி ஐந்து பாடல்களை வெளியிட்டார். இசைமாலை பாகம் 02இனை 2017ஆம் ஆண்டு பல ஆலயங்களை உள்ளடக்கிய 11 பாடல்களை உருவாக்கி இசையமைத்து வெளியிட்டார். தொடர்ந்து 23.08.2018ஆம் திகதி முள்ளிவாய்க்கால் ஸ்ரீ குமாரகணபதிப்பிள்ளையார் ஆலய புகழ்பாடும் இசைமாலை பாகம் 03 இனை இறுவட்டாக வெளியிட்டார்.

விருதுகள்

ஆசுகவி பட்டம்