ஆளுமை:இன்பச்செல்வி, விநாயகமூர்த்தி

From நூலகம்
Name இன்பச்செல்வி
Pages பன்னீர்ச்செல்வம்
Pages தெய்வானை
Birth 1978.05.14
Place அக்கரைப்பற்று
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இன்பச்செல்வி, விநாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பன்னீர்ச்செல்வம்; தாய் தெய்வானை. ஆரம்பக் கல்வியை திருக்கோவில் விவேகானந்தா வித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை திருக்கோவில் இராமகிருஸ்ண மிஷன் மகாவித்தியாலயத்திலும், உயர்தரத்தை திருக்கோவில் இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் கற்றார். வெளிவாரியாக பட்டப்படிப்பை மேற்கொண்ட போதும் வறுமை காரணமாக தனது கல்வியை இடைநிறுத்தியதாகத் தெரிவிக்கின்றார் எழுத்தாளர். இதழியல் டிப்ளோமா முடித்துள்ள இவர் காப்புறுதி விற்பனை பிரதிநிதியாகவும் ஊடகவியலாளரகவும் உள்ளார்.

2014ஆம் ஆண்டு இணையத்தின் ஊடாகவே எழுத்துத்துறைக்குள் நுழைந்த எழுத்தாளர் கவிதை, கட்டுரை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி ஆகிய நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கவிதைத் தொகுதியொன்றை வெளியிடத் தயாராகி வரும் எழுத்தாளர் கருங்கொட்டித்தீவு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் அக்னி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஸ்தாபகருமாவார். தமிழ் சமூக உணர்வு சார்ந்த சமூக செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் இன்பச்செல்வி.

விருது

2018ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஊடகவியலாளர்க்கான விருதை சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

குறிப்பு : மேற்படி பதிவு இன்பச்செல்வி, விநாயகமூர்த்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.