ஆளுமை:இப்றாஹீம், அபூபக்கர்

From நூலகம்
Name இப்றாஹீம்
Pages அபூபக்கர்
Pages முகைதீன் பீவி
Birth 1943.07.09
Place மூதூர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இப்றாஹீம், அபூபக்கர் (1943.07.09 - ) மூதூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அபூபக்கர்; தாய் முகைதீன் பீவி. இவர் மூதூர் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். மூதூர் கலைமேகம் என்ற புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவரது பைங்கிளியே என்னும் அறிமுகக் கவிதை 1967 இல் தினபதி நாளிதழில் பிரசுரமாகியுள்ளது. அன்றிலிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், பல சிறுகதைகளையும், கட்டுரைகள், நாடகங்கள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்பனவற்றையும் எழுதியுள்ளார்.

இவர் தனது 21 கவிதைகளைத் தொகுத்து தங்கப்பாளம் என்னும் தலைப்பில் கணணிப்பிரதி எடுத்து பத்துப் பிரதிகளை மாத்திரம் 2001.12.01 அன்று வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள் மூலம் வெளிவந்துள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 73-75
  • நூலக எண்: 13947 பக்கங்கள் 03-04