ஆளுமை:இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:43, 19 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இயேசுதாசன் சரவணமுத்து
தந்தை சாமித்தம்பி
தாய் நாகம்மை
பிறப்பு 1930.03.16
ஊர் துறைநீலாவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி (1930.03.16 - ) மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் நாகம்மை. இவர் தனது பாடசாலைக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலை, பெரிய கல்லாறு மெ. மி. பாடசாலை ஆகியவற்றில் கற்று, மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியருக்கான பயிற்சி பெற்றார்.

பத்திரிகையில் சிறுகதை, கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதியுள்ளார். மலையிலே சொன்னது, இயேசு அந்தாதி, புலம்பல் நூறு, விழித்தெழுங்கள், பரமகுரு தரிசனம், பொறுமை, வள்ளுவர் ஞானம் முதலான பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார்.

இவர் ஹோமியோபதி வைத்தியம், ஆயுள்வேத வைத்தியம், சோதிடம், முறிவு வைத்தியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 155