ஆளுமை:இராசலிங்கம், தம்பிப்பிள்ளை

From நூலகம்
Name இராசலிங்கம்
Pages தம்பிப்பிள்ளை
Birth
Pages 1991
Place கரவெட்டி
Category அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசலிங்கம், தம்பிப்பிள்ளை ( - 1991) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த அரசியல் தலைவர். இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியிலும், கட்டைவேலி ஞானசாரியார் கல்லூரியிலும், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து இந்தியாவின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளமாணிப் பட்டத்தையும் 1955 இல் முதுகலைமாணி பட்டப்படிப்புக்காக இந்திய அரசின் கலாச்சார புலமை பரிசில் பெற்று, சென்னை இராசதானிக் கல்லூரியில் இணைந்து முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கொழும்பு சென்ஜோசப் கல்லூரியில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர், தமிழ்த்துறைத் தலைவராகவும் அக்கல்லூரியின் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மனித உரிமைகள் இயக்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து, அதன் ஊடாகப் பல சமூகப் பிரச்சனைகளைப் பத்திரிகைகள் வாயிலாகத் தமிழ் மக்களது கவனத்திற்குத் தெரியப்படுத்தினார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற கொறடா - பொதுநலவாய பாராளுமன்றச்சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர், சர்வதேச பாராளுமன்ற நிறைவேற்றுக் குழு உறுப்பினர், அரச பொறுப்புக்கள் முயற்சிகள் குழு உறுப்பினர் போன்ற பதவிகளுடன் மேலும் பல பதவிகளை வகித்து வந்தார். இவர் பல பாடசாலைகளில் பௌதிக வள அபிவிருத்திக்கு உதவி புரிந்ததோடு தேவரையாளி இந்துக் கல்லூரி, கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி, கரணாவாய் மகா வித்தியாலயம் உட்பட மேலும் பல பாடசாலைகளுக்குக் கட்டட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 42-45