ஆளுமை:இராசையா, செல்லையா

From நூலகம்
Name இராசையா
Pages செல்லையா
Birth 1912.11.15
Pages 1975
Place தாவடி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, செல்லையா (1912.11.15 - 1975) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர், இவரது தந்தை செல்லையா. 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்று கல்யாணசுந்தர தேசிகரிடம் தேவார இசையினையும், நெல்லைரங்கப்பா அவர்களிடம் கர்நாடக வாய்ப்பாட்டு இசையையும் பயின்றார். ஈழம் திரும்பிய இவர். குப்பிளான் செல்லத்துரை அவர்களிடம் திருப்புகழ் பாடுவதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். 1959 இல் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தேவார இசைப் பகுதி நேர ஆசிரியராகவும், சிவதொண்டன் நிலையத்தில் தேவார ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

ஈழத்தில் இவருடைய இசை அரங்குகளுக்குப் பக்க வாத்தியமாக வி. பரமேஸ்வர ஐயர், எஸ். சோமஸ்கந்தசர்மா, ஏ. சிவசாமி, வி. உருத்திரபதி, கே. சித்திவிநாயகம், எஸ். சர்வேஸ்வரசர்மா ஆகியோர் வயலினும் ஏ. நமசிவாயம், வி. உருத்திராபதி ஆகியோர் புல்லாங்குழலும் என். தங்கம், வி. கணபதியாபிள்ளை, எம். என். செல்லத்துரை, ஏ. எஸ்.ராமநாதன் ஆகியோர் மிருதங்கமும் வாசித்து சிறப்பித்துள்ளனர். இவருடைய பண்ணிசையானது பக்தியும், ஜனரஞ்சகமும், சில இடங்களில் நெருடலான லய நுட்ப சங்கதிகள் அமைந்ததாகவும் அமையும்.


Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 119-122