ஆளுமை:இராஜநாயகன், சுந்தரம்பிள்ளை

From நூலகம்
Name இராஜநாயகன்
Pages சுந்தரம்பிள்ளை
Pages பறுவதம்
Birth 1926.06.27
Pages 1998.04.24
Place திருநெல்வேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜநாயகன், சுந்தரம்பிள்ளை (1926.06.27 - 1998.04.24) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படைத்தவர். இவரது தந்தை சுந்தரம்பிள்ளை; தாய் பறுவதம். ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் கற்றுப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றார். 1947 இல் அளவெட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிப் பல்வேறு பாடசாலைகளில் கற்பித்து 1981 இல் ஓய்வு பெற்றார்.

பாடசாலைக் காலத்திலேயே 1946 இல் மறுமலர்ச்சிச் சஞ்சிகை நடத்திய சிறுதைப் போட்டியில் இவரது முதற் சிறுகதை முதற்பரிசு பெற்றது. இவர் மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஈழநாடு உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார். அறுபதுகளில் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இவரது பிரயாணி என்ற நாவல் முதல் பரிசினைப் பெற்றது. 1949 இல் இந்து சாதனத்தின் துணை ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், கலைச்செல்வி இதழின் நிர்வாக ஆசிரியராக ஓராண்டும் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் இவரது மறைவின் பின்னர் தொகுக்கப்பட்டு சொந்தமண் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.


Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 127-128
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 39
  • நூலக எண்: 1544 பக்கங்கள் v-xiv
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 48-50