ஆளுமை:இராமலிங்கம், கந்தையாபிள்ளை

From நூலகம்
Name இராமலிங்கம்
Pages கந்தையாபிள்ளை
Pages தங்கமுத்து
Birth 1880.11.08
Pages 1953.06.14
Place சரசாலை
Category எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், கந்தையாபிள்ளை (1980.11.08 - 1953.06.14) யாழ்ப்பாணம், சரசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கந்தையாபிள்ளை; தாய் தங்கமுத்து. இவர் இளமையில் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களின் திண்ணைப் பள்ளியில் தமிழும், யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் படித்து வந்தார். நீராவியடியில் அக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வேதாரணியம் ஐயசாமிக் குருக்களிடம் இசைக்கலையைப் பயிலத் தொடங்கி, இசைத்தமிழ் வல்ல புத்துவாட்டிச் சோமசுந்தரம் அவர்களிடம் முறையாகப் பயின்றுள்ளார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதி விலாச சபையில் 1914 ஆம் ஆண்டு தொடங்கி 1925 ஆண்டுகள் வரை அளவற்ற தொண்டுகள் ஆற்றிக் கொண்டிருந்தார். இவரது பெருமுயற்சியினால் மட்டுவில் வடக்கு கமலாசினி வித்தியாசாலை என்னும் சைவப் பாடசாலை நிறுவப்பட்டதாகும். இவர் நமசிவாயம் அல்லது நான் யார்? என்னும் பெயருடன் சமய நாடக நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான பாடல்களையும், கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 45-46