ஆளுமை:இராமலிங்கம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:39, 24 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1940.06.28
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், சுப்பிரமணியம் (1940.06.28 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாசாலையிலும், உயர்கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பயின்றார். இவர் வலிகாமம் வடக்கு கலாச்சாரப் பேரவை வலயம் 2 இல் உபதலைவராகவும், யாழ்ப்பாண மாவட்டக் கலை கலாச்சாரப் பேரவையில் ஆயுட்கால உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

தனது இருபதாவது வயதில் இலங்கைக் காவல் துறையில் சேர்ந்த இவர், தனது முயற்சியால் அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக் கலையை வளர்ப்பதற்குப் பாடுபட்டார். இவர் அமரர் நைநார், லால் முதலியோரிடம் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாகச் சொன்னதைச் செய்வேன் நாடகத்தை அரங்கேற்றினார். இந்நாடகமானது கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹற்றன், பலாங்கொடை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டது.

இவரது கலைச்சேவைக்காக இவருக்குக் கிங்ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரொடெக்‌ஷன், 1974 ஆம் ஆண்டு இலங்கைக் கலைக்காவலர் என்ற பட்டத்தை வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 133-134