ஆளுமை:சரஸ்வதி, சிவகுரு

From நூலகம்
Name சரஸ்வதி
Pages சுப்பையா
Pages மெய்யம்மாள்
Birth 1961
Place நுவரெலியா, ராகலை
Category அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி, சிவகுரு (1961 -) நுவரெலியா மாவட்டத்தில் ராகலைப்பகுதியில் கோனக்கலை தோட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி. இவரது தந்தை சுப்பையா; தாய் மெய்யம்மாள். இவர் ராகலை தமிழ் மகாவித்யாலயத்தில் உயர்தரம் வரை படித்தார். வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியவில்லை. தந்தையார் சிலகாலம் தோட்டத்திலே மேற்பார்வையாளராகவும் கங்கானியாகவும் பணியாற்றியமையால் தொழிற்சங்கங்கள் பற்றி பல்வேறு விடயங்களை நெருக்கமாக எல்லா விஷயங்களையும் அதாவது இந்த நாட்டின் அரசியல் தொழிற்சங்க எல்லா விஷயங்களைப் பற்றியும் அடிக்கடி பேசிக் கொண்டிருக்க கூடிய ஒரு நிலைப்பாடு இருந்தது. அந்த தோட்டத்திலிருந்து படிப்பதால் மிகவும் கஷ்டமான சூழ்நிலை இருந்தது கிட்டத்தட்ட பத்து மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும் அங்கே ஐந்தாம் வகுப்பு மிகவும் கடினமான சூழ்நிலையில் தான் படிக்க வேண்டியிருந்தது. அந்த காலத்தில் தொழில்சங்க கூட்டங்களை போடுவார்கள். அந்த வகையில் அவருக்கு தெரிந்த ஒரு பெண்மணி திருமதி ரேணுகா ஹேரத் என்பவர் கூட கூட்டங்களிலே பேசும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தொடர்ந்து தலவாக்கலை பகுதியில் உள்ள கொலிவுட் தோட்டத்தில் சமூக சேவ இனைப்பளராக பணி அமர்வு கிடைத்தது. பின்னர் அவர் தொழிலாளர் தினத்தில் அன்று பேசிய பேச்சின் அடிப்படையில் தொழிலாளர் சங்கத்தின் மாதர் சங்கங்களை வழிநடத்துவதற்காக பணியமர்த்தப்பட்டார். 1991ல் சிவகுரு என்பவரை திருமணம் செய்து கொழும்பில் வசிக்கலானார். இந்த காலப்பகுதியில் இவருக்கு மலையகத்தில் சிறுவயதில் வழிகாட்டியாக இருந்த மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தனது உதவிச் செயலாளராக நியமித்தார். சரஸ்வதி அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பல பயிற்சிகளை பெற்றார். இந்த காலப்பகுதிகளில் கொழும்பில் கூட்டங்களைக் கூட்டுவதில் கடினமாக இருந்தாலும் சுமார் 5000 பெண்களுக்கு மேலதிகமாக மலையக பெண்களை இணைத்து மகளிர் தினத்தன்று கூட்டத்தை நடாத்திய பெருமை இவரை சாரும். இவ்வாறு இவர் கட்சி சார்ந்து தன்னுடைய உழைப்பினை வழங்கியிருந்தார். அதாவது அவர் கட்சி சார்ந்த உழைப்பினை குறிப்பிடும் பொழுது இரவு பகல் பாராது தன்னுடைய உதிரத்தை நீராக்கி உழைத்ததாகக் கூறுகிறார். இவ்வாறு தனது உழைப்பை வழங்கிய இவர் 1993இல் மத்திய மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் பொழுது அதில் கலந்து கொண்ட தனது தலைவரை தனக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்கிறார். இந்த வேளை ‘முதலில் வந்த தேர்தல் என்பதால் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது இல்லை என்பது தமது முடிவாகும்’ எனக்கூறப்படுகின்றது. சில காலத்தின் பின்னர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்த பின்னும் பொதுஜன தொடர்பு அதிகாரி பதவியை சரஸ்வதி அவர்கள் தனக்கு தருமாறு கோருகிறார்.இந்த சந்தர்ப்பம் அவருக்கு மறுக்கப்படுகிறது. இது அவருக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் விடயமாக அமைகின்றது. இவர் இப்பொழுது கேள்வி கேட்க தொடங்குகிறார். பெண்கள் இவர்களுக்கு பணிபுரிய மட்டும்தான் அரசியலில் அங்கம் வகிக்கும் அல்லது பதவிகளை கொடுக்கவோ இவர்கள் முன்வர மாட்டார்கள் என்பது அவரது கருத்தாகும். இவ்வாறு இருக்கையில் அவருக்கு இரண்டாவது குழந்தை கிடைக்கிறது இந்த குழந்தை கிடைத்து இரு மாதங்களுக்கு இடையில் வேலையில் இணையுமாறு சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் செயலாளர் அவர்களால் அழைப்பு விடப்படுகிறது. இதனால் சரஸ்வதி வேலையை விட வேண்டிய நிலைமை அமைகிறது.

ஐந்து வருடங்களின் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கிய வெள்ளையன் என்பவரால் இவரது பெயர் முன்மொழியப்படுகிறது. அப்பொழுது தொழிலாளர் தேசிய சங்கத்தை நிர்வாகி தலைவர் திகாம்பரம் அவர்களால் அச்சங்கத்தின் மாதர் சங்கத் தலைவியாக சரஸ்வதி நியமிக்கப்ப ட்டார். 2013இல் இடம்பெற்ற மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது சரஸ்வதி சிவகுரு அவர்கள் வேட்பாளராகி 27000 வாக்குகளைப் பெற்று முதல்முறையாக மலையகத்தில் தெரிவு தெரிவு செய்யப்பட்ட பெண்ணாக இவர் காணப்பட்டார்.

இதன் பின்னர் நுவரேலியா மாவட்ட பிரதேச ரீதியாக 12 பெண்களை அரசியல்வாதியாகவும், 15 பெண்களை தொழிற்சங்கங்களின் இணைப்பதிகாரி களாகவும் உருவாக்கினார். அத்தோடு மலையகத்தில் 500 மாதர் சங்கங்களை உருவாக்கியுள்ளார். இவர்களை சந்திக்கும் போதும் இவர்களுடன் பேசும் போதும் ஓர் ஊக்குவிப்பார் ஆகவே தான் காணப்படுவதாக குறிப்பிடுகிறார். மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது தேசிய தொழிலாளர் சங்கத்தின் மாதர் சங்கத் தலைவியாக சேவை புரிகிறார்.

இவரது தற்போதைய சேவை ஆக தோட்டங்களில் இருக்கும் பெண்களை வழிநடத்துவது, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தொடர்பில் தேவையான செற்பாடுகளை செய்வது, மலையகத்தில் காணப்படும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்றன காணப்படுகின்றன.

இவர் பெண்கள் சம்பந்தமான கவிதைகளை எழுதுவதோடு கடந்த காலத்தில் இளைஞர் காங்கிரஸ் பத்திரிகைகயிலும் எழுதியுள்ளார்.

படித்த சமுகங்கள் நாளை தமது பணி அமர்வில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் அதனை அன்றைய நாளில் ஆயத்தப்படுத்துகிறார்கள். இவ்வாறு இவர்களுடைய காலம் போகிறது வெளியுலகம் சமூகம் பற்றி, சமூக சேவை பற்றி இவர்களுடைய சிந்தனை திருப்பி விடப்படவில்லை என்பதை தனது கவலையாக காணப்படுகிறது என குறிப்பிடுகிறார்.