ஆளுமை:சர்மலா, அமிர்தாயன்

From நூலகம்
Name சர்மலா
Pages சந்திரதாசன்
Pages இரத்தினேஸ்வரி
Birth 1988.06.21
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சர்மலா, அமிர்தாயன் (1866.0621) யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். இவரது தந்தை சந்திரதாசன்; தாய் இரத்தினேஸ்வரி. ஆரம்பக் கல்வியை யாழ் தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலை , உயர்நிலைக் கல்வியை பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாடலையிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் பட்டம் பெற்று அதே துறையில் உதவி விரிவுரையாளராக 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார். தற்பொழுது தெல்விப்பளைப் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார். இவர் செப்புத்தகட்டு புடைப்புச் சிற்பம் தொடர்பாக விசேட பயிற்சி பெற்றவர். சிற்பத்துறையில் பெண் கலைஞர்கள் இலங்கையில் மிகக்குறைவாகவே காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஓவியம் என்னும் தூரிகை வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் சிறுவர்களினதும் மனநிலையை போர் அவலங்களையும் தனது ஓவியத்தின் ஊடாக வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்றி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இவரின் ஓவியம் பேசுகிறது. சுனாமி அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஓவியங்களில் இவரின் சுனாமி ஓவியமும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்திய நிறுவனம் நடாத்திய ஓவியப் போட்டியில் சுனாமி தொடர்பான இவரின் ஓவியத்திற்கு தெற்காசியாவில் முதலிடம் கிடைத்ததுடன் பணப் பரிசாக இந்திய ரூபாவில் பத்தாயிரம் ரூபாவையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. கலைமுகம் சஞ்சிகையின் அட்டைப்படத்தை இவ் ஓவியம் அலங்கரித்தமையை இவர் பெருமையுடன் நினைவுகூருகிறார். எட்டுக்கும் மேற்பட்ட நூல்களிலும் சஞ்சிகைகளிலும் இவரின் ஓவியம் அட்டைப்படமாக வெளியாகியுள்ளன. செப்புப்புடைப்புச் சிற்பம் - Crafts Works) Based Paper works, முகமூடிகள், களிமண்ணிலான சிற்பங்கள், ரெஜிபோம், cutting ஆடைவடிவமைப்பு, மரச்சிற்ப புனரமைப்புக்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறார். கைத்தொழில் கண்காட்சிகளில் கடதாசிகளிலான கைவினைப்பொருட்கள், செப்புப்புடைப்புச் சிற்பங்களை காட்சிப்படுத்தி வருவதோடு தேசிய மட்டப் போட்டிகளிலும் கலந்துகொள்கிறார் ’ஓவியர் சர்மலா.

விருதுகள்

இந்திய நிறுவனம் நடாத்திய ஓவியப் போட்டியில் சுனாமி தொடர்பான இவரின் ஓவியம் தெற்காசியாவில் முதலிடம் கிடைத்ததுடன் இந்திய பணப் பரிசில் பத்தாயிரம் ரூபாவையும் பெற்றமை கைப்பணிப் பொருட்களுக்கான போட்டியில் 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது.

வெளி இணைப்புக்கள்