ஆளுமை:சித்ரா, நாகநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்ரா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்ரா நாகநாதன் ஓர் எழுத்தாளர். 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட இவரது முதல் சிறுகதைத் தொகுதி கிராமத்து மண்கள் சிவக்கின்றன என்ற தலைப்பில் தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்து. கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் இவர் வெளிப்படுத்தியுள்ளதோடு பெண்ணிய கருத்துக்களை வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார்.

ஒரு போராளியின் காதலி காத்திருக்கிறாள், பெற்றமனம், அடம்பன் கொடியும் புத்தாண்டு வெடியும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை, வேதனையின் சுவடுகள், கிராமத்து மண்கள் சிவக்கின்றன, தலைமுறைகள் முதலிய இவரது சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32