ஆளுமை:சுந்தராம்பாள், பாலச்சந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தராம்பாள் பாலச்சந்திரன்
தந்தை கார்த்திகேசு
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1960.05.22
ஊர் மல்லாவி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தராம்பாள் பாலச்சந்திரன் (1960.05.22 - ) யாழ்ப்பாணம், மல்லாவியைச் சேர்ந்த எழுத்தாளரெ. இவரது தந்தை கார்த்திகேசு; தாய் அன்னப்பிள்ளை. மல்லவி மத்திய கல்லூரியிலும் இராமநாதன் பெண்கள் கல்லூரியிலும் கல்வ்சி பயின்ற இவர் பின் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து தமிழ்மணிப் புலவர் பட்டம் பயின்று முதல் த்ரத்தில் சித்தி அடைந்துள்ளார். இவரது முதல் ஆக்கமான இசையும் கதையும் என்ற நாடகம் 1998ஆம் ஆண்டில் இலண்டனில் இயங்கி வரும் ஐ.பி.சி. வானொலியில் ஓ நெஞ்சே மறவாதே என்னும் தலைப்பில் ஒளிபரப்பானது.

இவர் இதுவரை ஏறக்குறைய 25 சிறுகதைகள், 8 கட்டுரைகள், 1 நாடகம், 20 இசையும் கதையும், 12 உறுங்கதைகள் என்பனவற்றைப் படைத்துள்ளார். அவர்றுள் அருணி வருவாளா என்ற சிறுகதை' தமிழ்ச்செல்வி என்ற நாடகம் போன்றவை பரிசுகளைப் பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 76-79
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 66-68