ஆளுமை:தாரிகா, சித்திக்

From நூலகம்
Name தாரிகா
Pages ஸித்திக்
Pages ஹவ்வா உம்மா
Birth
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாரிகா, சித்திக் கண்டி மாவனெல்லையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஸித்திக்; தாய் ஹாஜியானா ஹவ்வா. தாரிகா மர்சூர் என்ற பெயரில் பிரபல்யமான இவர் தற்சயம் தாரிக்கா சித்திக் என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை மாவனல்லை பதுரிய்யா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு இவர் தெரிவாகிஇருந்தபோதிலும் கல்வியைத் தொடர முடியாத சூழலில் கல்வியை இடைநிறுத்தி திருமண பந்தத்தில் இணைந்தார். 1981ஆம் ஆண்டு நான்காம் வகுப்புப் படிக்கும்போதே சிறுவர் உலகம் மூலம் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்தார். கவிதை, கட்டுரை, கதை, நாடகம் எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் தாரிகா சித்திக். இவரின் ஆக்கங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளதுடன் இவர் எழுதிய பல நாடகங்கள் இலங்கை ஒலிரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பாகியுள்ளன. தினசரி, வார நாளிதழ்கள் மற்றும் சிற்றேடுகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பொன்று 2006ஆம் ஆண்டு மனங்களின் ஊசல்கள் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. தொலைக்காட்சி நாடகங்களையும் தற்பொழுது எழுதி வரும் எழுத்தாளர் திரைப்படத்திற்காக கதை எழுதும் ஆற்றலையும் கொண்டுள்ளார்.

விருதுகள்

2006ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் நட்சத்திரப் பெண் போட்டியில் பெறுமதியான தங்கப்பதக்கத்தையும் பரிசாகப் பெற்றதுடன் இலக்கியத் தாரகை என்ற சிறப்புப்பட்டமும் பெற்றுள்ளார்.