ஆளுமை:நார்வினி டேரி

From நூலகம்
Name நார்வினி டேரி
Birth
Place
Category கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நார்வினி டேரி இலங்கையில் தமிழ் குடும்பத்தில் பிறந்த கலைஞர் டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்து தற்போது வசித்து வருகிறார். மொடலிங்கில் ஈடுபாடு கொண்ட இவர் பாடலாசிரியர், பின்னணி பாடசி, நடிகை என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

பின்னணிப் பாடகியான நார்வினி மியூசிக் ஆல்பங்களில் நடித்து பிரபலமானவர். உயிர்வரை இனித்தாய் என்னும் டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற சாதனை தமிழா என்ற விருது வழங்கும் விழாவில் இப்படம் ஒன்பது விருதுகளை பெற்றது. நார்வே தமிழ்த் திரைப்பட விழாவிலும் உயிர்வரை இனித்தாய் படம் இரண்டு விருதுகளையும் பெற்றது. சிறந்த நடிகைக்கான விருதையும் இவர் உயிர்வரை இனித்தாய் படத்தின் நடித்தமைக்காகப் பெற்றுக்கொண்டார்.

நார்வினி நடித்த சினம்கொள் படம் கல்கத்தா கல்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது சிறந்த புதுமுகத் திரைப்படத்துக்கான விருதையும் இவர் வெற்றுள்ளார். நார்வினி மியூசிக் ஆல்பங்களை இயக்கி வருகிறார். இலங்கையின் முதல் தமிழ் பெண் இயக்குனர் என்ற பெருமைக்கு உடையவராவார்.

மிஸ்யுனிவர்ஸ் டென்மார்க் அழகிப் போட்டியில் கலந்துகொண்டு இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி Best Charity Ambassador என்ற விருதையும் வென்றார்.

வெளி இணைப்புக்கள்