ஆளுமை:பஸ்மினா, அன்ஸார்

From நூலகம்
Name பஸ்மினா, அன்ஸார்
Pages அன்ஸார்
Pages மதீனா
Birth
Place உக்குவளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஸ்மினா, அன்ஸார் மாத்தளை உக்குவளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அன்சார்; தாய் மதீனா. புனைய பெயர் இளைய நிலா, பிந்தி மதீனா, கரும்பூர் தேனீ, சூரியப்ரியா, உம்மு ஷஃபிய்யா, மீனுக்குட்டி, மினா. இவரது கணவர் ரிஃபாக் முஹம்மத், இவரின் ஒரே மகள் ஷஃபிய்யாவும் ஆங்கில கவிதைகளை எழுதி வருகிறார். இவர் ஒரு ஆசிரியராவார்.

பாடசாலைக்காலத்திலே சிறுகதைகள் கட்டுரைகளை எழுதுவதுடன் நாடகங்களை உருவாக்கி நடித்தும் உள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் படிக்கும் போது இவர் எழுதிய சிறுகதை அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றது.

கவிதை, கட்டுரை, சிறுகதை ஆற்றல் கொண்ட இவரின் கவிதைகள் தினகரன் நாளிதழில் புதுப்புனல் பக்கத்தில் முதல் முதலாக வெளிவந்தது. இளையநிலா என்ற இவரின் கவிதைத் தொகுதி நூல் ஒன்றை உயர்தரம் கற்கும் போது வெளியிட்டுள்ளார். ஷம்ஸ் மற்றும் அஸீஸ் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உக்குவளையில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய எழுத்தாளர் அமைப்பை ஆரம்பித்து அதன் ஊடாக பயிற்சிப்பட்டறைகள், போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதுடன் புத்தக அறிமுக விழாக்ளென இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

ஷம்ஸ் அவர்களின் நினைவாக 2002ஆம் ஆண்டு நாச்சியா தீவு ஃபர்வீனுடன் இணைந்து புதுப்புனல் எனும் தலைப்பில் நினைவு கவிதைத் தொகுதியொன்றை வெளிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3037 பக்கங்கள் {{{2}}}