ஆளுமை:பாக்கியராசாத்தி

From நூலகம்
Name பாக்கியராசாத்தி
Birth
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாக்கியராசாத்தி, மனுவல் யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்த கலைஞர். யாழ்ப்பாணத்தில் தென்மோடிக்கூத்தில் நடித்த இவர் பாசையூர் மனுவல் பாக்கியராசாத்தி என்ற பெயரால் அறியப்படுகிறார். 1955ஆம் ஆண்டில் தனது கலைப் பணியை ஆரம்பித்தவர். 1967ஆம் ஆண்டில் திருநீலகண்டன் என்ற கூத்தினை எழுதி நுழைவுச்சீட்டிற்கு அரங்கேற்றினார். துதிப்பாடல்கள், நடசாதிப்பாடல்கள், ஆலயப் பாடல்களை மடுமாதா, மண்ணித்தலை, கிளாலி சந்தியோகுமையோ போன்ற ஆலயங்கள் மீது பாடியவர். இவர் பாசையூரில் தலைசிறந்த அண்ணாவியார்களான பிலிப்பையா, அல்பிறட், நெல்சன் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்ட பெருமைக்குரியவர். திருநீலகண்டர், ஞானசௌந்தரி, சமர்க்களவீரன், சந்தியோகுமையோ, சிரங்கேட்டங்காரி போன்றன இவரால் எழுதப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட கூத்துக்களில் சிலவாகும்.