ஆளுமை:மனோன்மணி, கந்தையா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:44, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மனோன்மணி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோன்மணி
தந்தை கந்தையா
தாய் நாகம்மா
பிறப்பு 1951.08.30
ஊர் யாழ்ப்பாணம், கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோன்மணி, கந்தையா (1951.08.30) யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை கந்தையா; தாய் நாகம்மா. ஆரம்பக் கல்வியை ஆவரங்கால் நடராஜ இராமலிங்கம் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக் காலத்திலேயே பேச்சு போட்டி கட்டுரைப் போட்டி ஆகிவற்றில் கலந்துகொண்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றார்.

பட்டதாரியான இவர் 1976ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் இணைந்தார். பூவரசங்குளத்தில் முல்லை என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் இருந்து சஞ்சிகை வெளியிட்டார்.

2000ஆம் ஆண்டு முதுதத்துவமானி ஆய்வுக்குத் தமிழ் நாவல்களில் பெண் பாத்திரப் படைப்பு என்ற கருப்பொருளைத் தன் ஆய்வாக மேற்கொண்டார். இவர் மரபு சார்ந்த நாடக மரபுகளையே தன் நாடகத் துறையில் புகுத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 97-98