ஆளுமை:மும்தாஜ் பேகம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:46, 19 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மும்தாஜ் பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மும்தாஜ் பேகம்
தந்தை புஹாரிடீன்
தாய் ஆரிபா
பிறப்பு
ஊர் கலதெனிய உடத்தலவின்ன
வகை எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மும்தாஜ் பேகம் கண்டி உடத்தலாவின்னையில் பிறந்த எழுத்தாளர். இவரின் தந்தை புஹாரிடீன் தாய் ஆரிபா. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர்க் கல்வி வரை உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்தியக் கல்லூரியில் கற்றார். இவரின் கணவர் முஹம்மத் ரஜாத். ஹப்ஸா, அம்மார் என்ற இரண்டு பிள்ளைகள்.

சமூகம் சார்ந்த சேவைககளில் ஆர்வம் கொண்ட இவர் உடத்தலவின்ன சுகாதாரப் பிணியாய்வு நிலையத்தில் சேவை செய்ததுடன் குடும்ப நலத் தாதியருடன் ஊரில் பல வீடுகளுக்கும் விஜயம் செய்து சுகாதார விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். 1996-1997ஆம் ஆண்டு வத்தேகெதர அஸ்ஸபா வித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியையாகப் பணி புரிந்தார். சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஒன்றைச் செயற்படுத்துவதில் மிகவும் அக்கரையுடன் செயற்பட்டார். 

2003ஆம் ஆண்டு தினகரன் வார மஞ்சரியில் பிரசுரமான சீதனம் என்ற கவிதையின் ஊடாக இலக்கிய உலகிற்குள் பிரவேசித்தார். தாருல் ஹப்ஸா குர்ஆன் மத்ரஸா மும்தாஜ் பேகத்தின் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் ஊடாக 2013ஆம் ஆண்டு தங்கத்தாரகை எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள் எனும் வழிகாட்டி நூலொன்றை இவர் 2014ஆம் ஆண்டு வெளியிட்டார். 2018ஆம் ஆண்டு பெண்ணே நீ தங்கத்தாரகையாக எனும் கட்டுரைத் தொதியையும் வெளியிட்டுள்ளார்.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மும்தாஜ்_பேகம்&oldid=332730" இருந்து மீள்விக்கப்பட்டது