ஆளுமை:றஸீனா, புஹார்

From நூலகம்
Name றஸீனா
Birth 1949.12.25
Place பதுளை
Category எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றஸீனா, புஹார் (1949.12.25) பதுளை, லுனுகலையில் பிறந்த எழுத்தாளர். பதுளை லுனுகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். அளுத்கம பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார். ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ள இவர் கவிதைத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். மண்ணிழந்த வேர்கள் (2003) எனும் பெயரில் இலக்கிய உலகிற்கு கவிதைத் தொகுதி ஒன்றை தந்துள்ளார். 1966ஆம் ஆண்டு ”பெண் உலகம்” எனும் தினகரன் பத்திரிகையில் இவரது முதலாவது கவிதை வெளிவந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். தினகரன், மித்திரன், நவமணி, இடி போன்ற பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளதுடன் இலங்கை வானொலியிலும் இவரது கவிதைகள், சிறுகதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது கவிதைகள் மலையக மண்வாசைனை சார்ந்த சீதனப்பிரச்சினை, காதல், மாரியம்மன் திருவிழா, மலையக அரசியல்வாதிகள், பெண்ணடிமை, மதுவரக்கன், வெளிநாடு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, வீட்டு வேலைக்கார விவகாரம் என மலையக பெருந்தோட்ட மக்களின் அன்றாட பிரச்சினைகளை தமது கவிதையின் ஊடாக பேசியுள்ளார். மலையகத்தில் மறக்க முடியாத பெண் எழுத்தாளரான றஸீனா புஹார் எம்மத்தியில் தற்பொழுது இல்லை.

Resources

  • நூலக எண்: 10619 பக்கங்கள் 25