ஆளுமை:லறீனா, அப்துல் ஹக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லறீனா
தந்தை எம்.எம்.அப்துல் ஹக்
தாய் பௌசுல் ஹினாயா
பிறப்பு 1976.05.22
இறப்பு -
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லறீனா, அப்துல் ஹக் (1976.05.22) மாத்தளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கலகெதர எம்.எம்.அப்துல் ஹக் (இசையமைப்பாளர்).இவர் கீதா, சுஜீவா, சுனேத்ரா, ஒபய்மமய், சூகிரிகெல்ல) ஆகிய சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்; தாய் பௌசுல் ஹினாயா (எழுத்தாளர் மாத்தளை பர்வீன்). லறீனா அப்துல் ஹக் இரண்டு குழந்தைகளின் தாயாராவார். இவர் மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி தமிழ் (சிறப்பு) பட்டத்தையும், முதுதத்துவமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். மும்மொழித்துறைகளும் இணைந்து நெறிப்படுத்திய மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சுமார் நான்கு வருடங்கள் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது விரிவுரையளராக மொழிகள் துறை சமூகவிஞ்ஞான மற்றும் மொழிகள் பீடம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகிறார். இவர் ஒரு சிறந்த மும்மொழி மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தமிழ் வினாப்பத்திரத்தில் எழுதிய கதையை தனது முதலாவது கதையெனத் தெரிவிக்கும் எழுத்தாளர் லறீனா, தனது 12ஆவது வயதில் எழுதிய "ஓ!பஸ்ஸே" என்னும் கவிதை வீரகேசரியில் பத்திரிகையில் பிரசுரமான முதல் கவிதையெனவும் தெரிவிக்கிறார். தமிழ், சிங்கள, ஆங்கில மொழித்தினப் போட்டிகள், மீலாத் விழாப் போட்டிகள் என்பன தனது கலை மற்றும் எழுத்தாற்றல் வளரக் காரணமாக இருந்ததெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர் லறீனா. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படும் மும்மொழி செய்திமடலான பிரவாகினியின் சிங்களச் செய்தி மடலுக்கு ஆசிரியராக 2016ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படும் பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகையின் இதழாசிரியர் குழு அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

விருதுகள் பொருள்வெளி நூல் 2012ஆம் ஆண்டு - தேசிய கலை இலக்கியப் பேரவையால் பரிசுக்குரிய ஆய்வு நூலாகத் தெரிவு செய்யப்பட்டது.

தஜ்ஜாலின் சொர்க்கம் சிறுகதைத் தொகுதிக்கான (கையெழுத்துப் பிரதிப் போட்டியில்) 2015ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான கொடகே விருது.

படைப்புகள்

  • எருமை மாடும் துளசிச் செடியும்
  • வீசுக புயலே! (கவிதைத் தொகுதி)
  • தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைத் தொகுதி)
  • ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்)
  • செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்)
  • மௌனத்தின் ஓசைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி)
  • வார்த்தைகளின் வலி தெரியாமல் … (சமூகவியல் கட்டுரைகள்)
  • பொருள் வெளி (ஆய்வுக் கட்டுரைத் தொகுதி)
  • நீட்சிபெறும் சொற்கள் (கட்டுரைத் தொகுதி)
  • சுயமி (மெல்லிசைப் பாடல்கள் இறுவட்டு)


குறிப்பு : மேற்படி பதிவு லறீனா அப்துல் ஹக் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 8312 பக்கங்கள் 120
  • நூலக எண்: 8313 பக்கங்கள் 143-144
  • நூலக எண்: 8314 பக்கங்கள் 136-37
  • நூலக எண்: 14910 பக்கங்கள் 65
  • நூலக எண்: 15558 பக்கங்கள்

வெளி இணைப்புக்கள்