ஆளுமை:வஸீரா, ஹஸன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:26, 29 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வஸீனா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வஸீனா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வஸீரா, ஹஸன் கண்டி மாவனல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியைப் பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பை முடித்தவர். இவர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியை. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்றவர். தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய உயர் ஆங்கில டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளார். மாவனல்லை அல்பத்திரியா பாடசாலையில் கடமை புரிந்து வருகிறார். இவரின் கணவர் ஹசன் ஒரு புகழ் பூத்த இலக்கியவாதியாவார். 2007ஆம் ஆண்டு சமரசம் சஞ்சிகையில் இவரது முதலாவது கட்டுரை வெளிவந்தது. நவமணி, டைம்ஸ், தினகரன் ஆகிய நாளிதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அல்ஹஸனாத் சஞ்சிகையில் இவர் தொடராகவும் எழுதி வருகிறார். த திரென்ட் (The Trend) ஆங்கில சஞ்சிகையின் ஃபெமிலி திரென்ட் (Family Trend) பகுதியிலும் பொறுப்பாசிரியராக சில காலம் கடமைபுரிந்த வஸீரா அதே சஞ்சிகையில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அல்ஹஸனாத் சஞ்சிகையில் தொடராக வெளிவந்த தாய் மகளுக்கு தோழி என்ற இவரது கட்டுரை 2003ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. இதே சஞ்சகையில் இவர் எழுதிய மற்றொரு தொடர் கட்டுரையான வாழ நினைத்தால் வாழலாம் என்ற கட்டுரையும் 2011ஆம் ஆண்டு நூலுருப்பெற்றது. ”முஸ்லிம் உம்மத்தின் வரலாற்றுப்பாதை என்ற தலைப்பிலான மற்றுமொரு நூலும் 2014ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. மௌலானா மப்ஜுதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பேனா முனை சந்திப்பும் – மரியம் ஜெமீலாவும் பற்றிய ஆக்கம் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு அல்ஹசனாத் பத்திரிகையில் 17 தொடர் கட்டுரைகளாக வெளிவந்தது. (Gift to Bride) என்ற நூலை முத்துச்சரம் என்ற பெயரில் மொழிப்பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். ”அகரம்” என்ற சிறுவர் சஞ்சிகையில் ஆங்கிலப் பகுதிக்கு இணையாசிரியராகவும் செயல்பட்டுள்ளார். கவிதை எழுதும் திறன் கொண்ட வஸீரா 2006ஆம் ஆண்டு கல்வி அமைச்சு நடத்திய ஆசிரியர் தின கவிதைப் போட்டியில் விருட்சங்கள் நாம் என்ற கவிதை முதலிடத்தை பெற்றுள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வஸீரா,_ஹஸன்&oldid=308364" இருந்து மீள்விக்கப்பட்டது