ஆளுமை:வஸீலா, சாஹிர்

From நூலகம்
Name வஸீலா
Pages அபூபக்கர்
Pages ஷெகீனா
Birth
Place மாத்தளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வஸீலா, சாஹிர் மாத்தளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அபூபக்கர்; தாய் ஷெகீனா. கல்லொளுவ மினுவங்கொட அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுள்ளார். நீர்கொழும்பில் வசித்து வரும் எழுத்தாளர், நீர்கொழும்பு முகர்ரமா சர்வதேச பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றுகிறார். 1986ஆம் ஆண்டு இலக்கியத்துறையில் பிரவேசித்த எழுத்தாளர் கதை, சிறுகதை, கவிதை போன்றவற்றை எழுதுவதில் திறமை கொண்டவர். இவரின் ஆக்கங்கள் நவமணி, தினகரன், மெட்ரோ, பிறைநிலா ஆகிய பத்திரிகளில் வெளிவந்ததோடு இலங்கை வானொலியின் இசையும் கதையும் இளைஞர் இதயம், மாதர் மஜ்லிஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஆக்கங்களை எழுதியுள்ளார். நிலவுக்குள் சில ரணங்கள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதி 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொழியின் மௌனம் என்ற வஸீலாவின் நாவலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது. இலக்கியவாதியாக மட்டும் இவர் இல்லாது அரசியல்வாதியாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வஸீலா இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிர் அணியின் நீர்கொழும்புக்கிளையின் செயலாளராகவும் இருப்பதோடு சமூகசேவகியாகவும் இருக்கிறார்.

விருது

உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் மொழியின் மௌனம் என்ற நாவலுக்கு விருது.

வெளி இணைப்புக்கள்