ஆளுமை:ஹலீம்தீன், எம். எச். எம்.

From நூலகம்
Name ஹலீம்தீன், எம். எச். எம்.
Birth 1937.10.24
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹலீம்தீன் (1937.10.24 - ) கண்டி, கல்ஹின்னையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். கல்ஹின்னை அல்மனார் தேசிய கல்லூரி, அழுத்கம அல் - ஹம்ரா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான 'மாலைக்காட்சி' 1954 இல் தினகரனில் பிரசுரமானது. இவரது முதலாவது வானொலிப் பேச்சான 'இனையில்லா இல்லத்தரசி கதீஜா நாயகி' இலங்கை வானொலியில் 1958 இல் ஒலிபரப்பாகியது. இவர் அருட்கவி, கல்வீட்டுக் கவிராயர், மீலாஹ், அதிரடியான் என்னும் புனைபெயர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், சிறுவர் பாடல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவரது What is Woman என்ற ஆங்கிலக் கவிதை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் Hiltonian என்றசஞ்சிகையில் பிரசுரமானது. இவர் கவியரசு, கலைமணி, கவிச்சுடர், அருட்கவி, தமிழ் ஒளி, ரத்னதீபம், இருமொழிக்கவிஞன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 106-109


வெளி இணைப்புக்கள்