ஆளுமை: தம்பிமுத்து, இராமு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:20, 17 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{ஆளுமை1| பெயர்=திரு.தம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


பெயர் திரு.தம்பிமுத்து
தந்தை இராமு
பிறப்பு 1902
இறப்பு 1959
ஊர் மட்டுவில் மேற்கு தம்பிராய்
வகை கூத்து அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிமுத்து, இராமு (1902 - 1959) மட்டுவில் நாடு மேற்கு தம்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட கூத்து அண்ணாவி ஆவார். இவரது தந்தை செல்லப்பா இராமு. இவரது புனைப்பெயர் அம்மான் ஆகும் . இவர் காத்தான் கூத்து பழக்கி வந்தார். சிலர் இவரை தம்பிமுத்து அண்ணாவி என்றும் அழைப்பார்கள். செல்லியம்மன் கோயில், ஆரியம்பொந்து, தம்பிராய் என்றும் பல இடங்களில் காத்தான் கூத்தனைப் பழக்கி மேடையேற்றினார்.

அண்ணாவியின் சகோதரி சின்னம்பிள்ளை அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் கதிராசி. கதிராசியின் மகள் நடேசபூபதி. இவர்களால் 1955 செல்லியம்மன் கோயில் திருவிழாவுக்கு காத்தான் கூத்து ஆரங்கேற்றப்பட்டது. இவருடைய உறவினர்கள் வழித்தோன்றல்கள் மட்டுவில் மேற்கில் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர் காத்தான் கூத்து மட்டுமன்றி கோவலன் கதை, தேசிங்கு ராஜன் கதை போன்றவற்றையும் பழக்கி வந்தார். இவருடைய நாடகங்கள் சில தம்பி ஆலடியில் நடைபெற்றுள்ளதாக முதியவகள் கூறுகின்றார்கள். எதிர்பாராத விதமாக இவர் 1959 ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த போது வெண்கல உடுக்கு கைத்தாளம், நெத்திப்ப்பட்டங்கள், கும்ப சேட், கோவலன் கதை புத்தகம், தேசிங்கு ராஜன் கதை புத்தகம், காத்தான் கூத்து கொப்பி என்பன இவர் வீட்டில் இருந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றார்கள்.