நிறுவனம்:கிளி/ மாயவனூர் ரங்கநாதப்பெருமாள் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ மாயவனூர் ரங்கநாதப்பெருமாள் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place மாயவனூர்
Address மாயவனூர் வட்டக்கச்சி, கிளிநொச்சி
Telephone
Email
Website


மாயவனூர் அருள்மிகு ஶ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தின் தீர்த்தமாக சித்தாமிர்ததீர்த்தம் (மம்மில்குளம்) விளங்குகின்றது.

வெளி இணைப்பு