நிறுவனம்:திரு/ உப்புவெளி சோலையடி வைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரு/ உப்புவெளி சோலையடி வைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் உப்புவெளி
முகவரி உப்புவெளி, திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

உப்புவெளி சோலையடி வைரவர் கோயில் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளிக்குச் செல்லும் பாதையில் உப்புவெளிக் கிராம எல்லையில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் அமைந்துள்ள இடம் சோலையடி என அழைக்கப்படுவதால் சோலை வைரவர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது.

திருகோணமலையிலுள்ள கோணேசர் கோயிலுக்கு எல்லைக்காவல் தெய்வமாக இருந்து வந்த இந்த ஆலயம் குளக்கோட்டன் காலத்தில் தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோயிலின் மூல மூர்த்தியாக வைரவர் விளங்குகிறார்.

உப்புவெளி கிராமச்சபையின் தலைவராகக் கடமையாற்றிய திரு.சி.கதிர்காமத்தம்பி அவர்கள் வைரவர் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் இந்த ஆலயத்தைக் கற்கோயிலாகக் கட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு பின்னர் முன்பிருந்த மண் கோயிலை சிறிய கற்கோயிலாக மாற்றி அதற்கு கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்தமண்டபம் என்பவற்றைக்கொண்ட கோயிலாக மாற்றியமைத்ததோடு 1975ஆம் ஆண்டு சிறப்பாக கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. 1986இல் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு பின்பு 2009ஆம் ஆண்டு ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இவ் ஆலயத்தில் பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாக்களும், சித்திரைப்பரணி, நவராத்திரி, திருவெம்பாவை என்பனவும் இடம்பெற்றது.