நிலக்கிளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நிலக்கிளி
93.JPG
நூலக எண் 93
ஆசிரியர் அ. பாலமனோகரன்
நூல் வகை நாவல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மல்லிகைப் பந்தல்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 150

[[பகுப்பு:நாவல்]]

வாசிக்க

நூல் விபரம்

நாகரீகம் பரவாத ஒரு விவசாயக் கிராமப்புறத்தில் வளர்ந்த பெண்ணான பதஞ்சலி அநாதையாகும் நிலையில் கதிராமனின் மனைவியாகின்றாள். பிற ஆணுடன் தொட்டுப் பழகுவது என்று கூடப் புரிந்து கொள்ளாத கள்ளம் கபடமற்ற அவள் புயல் தந்த சோதனையால் கணவன் அருகில் இல்லாத போது ஆசிரியர் சுந்தரலிங்கத்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தழுவப்படுகிறாள். அந்த நிகழ்ச்சியின் பின் அவள் யதார்த்த உலகைப் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றாள். நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவை. உயரே பறக்க விரும்பாதவை. பிறரிடம் இலகுவில் அகப்பட்டுக் கொள்பவை. ஆனால் அவை எளிமையானவை. அழகானவை. தம் சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத்துக்குள் உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கை இனிமையானது. 20ம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வவுனியா மாவட்ட தண்ணிமுறிப்பு கிராம விவசாயக் குடும்பப் பின்னணியில் அமைந்தது இக்கதையின் களம். பதஞ்சலியின் பாத்திரம் நிலக்கிளியாக இக்கதையில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியரின் முதலாவது நாவல் இது.

பதிப்பு விபரம்

நிலக்கிளி. அ.பாலமனோகரன். (புனைபெயர் இளவழகன்). கொழும்பு 14: வீரகேசரி பிரசுரம், 185 கிராண்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1973. (கொழும்பு 14: வீரகேசரி, 185 கிராண்பாஸ் வீதி). iஎ, 150 பக்கம், விலை: ரூபா 2.25. அளவு: 18ஒ12.5 சமீ.

நிலக்கிளி. அ.பாலமனோகரன். கொழும்பு: மல்லிகைப்பந்தல், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2002, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 13: யு.கே. பிரிண்டர்ஸ், 98 ஏ, விவேகானந்தா மேடு). எi, 150 பக்கம், விலை: ரூபா 146. அளவு: 18.5ஒ13 சமீ. (ஐளுடீN: 955 8250 22 8).

-நூல் தேட்டம் (# 1746)

"https://www.noolaham.org/wiki/index.php?title=நிலக்கிளி&oldid=5712" இருந்து மீள்விக்கப்பட்டது