நூலகம்:பகுப்பாக்கம் அறிமுகம்

From நூலகம்

பகுப்பாக்கம்
நூலகப் பகுப்பாக்கம் அறிவின் திறவுகோல் எனப்படுகின்றது. ஆவணங்களை அதற்குரிய ஒழுங்கில் அடுக்கி வைத்திருக்கும் ஆற்றல் பெற்ற எவருமே அதன் அமைவிடத்தை இலகுவாக அறிந்திருப்பது மட்டுமன்றித் தேவைப்படும் போது அவற்றை இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதால் நூலகப் பகுப்பாக்கமானது ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மிகச்சிறந்த அடிப்படையாகக் கருதப்படுகின்றது.

வரைவிலக்கணங்கள்
ஒத்த தன்மைகளின் அடிப்படையில் தர்க்க ரீதியிலான ஒழுங்கில் பொருட்களை, குறிப்பாக ஆவணங்களை அவற்றிற்குரிய சரியான இடத்தில் ஒழுங்குபடுத்தலே பகுப்பாக்கம் - Harrod's நூலகவியல் சொல்லகராதி

குறிப்பிட்ட தகவலைல் கண்டுபிடிப்பதற்கு அல்லது படிப்பதற்கு ஏற்றவகையில் நூலக இறாக்கைகளில் நூல்களை அல்லது பட்டியல் அல்லது சொல்லடைவுப் பதிவுகளை பாவனையாளர் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கில் ஒழுங்குபடுத்தலே பகுப்பாக்கம் - Berwick Sayers

எண்களைப் பயன்படுத்தி ஒத்த கருத்துக்களை அல்லது ஆவணங்களை விரும்பிய வரிசையில், ஒன்றாக்கி வைத்தல் பகுப்பாக்கம் - எஸ். ஆர். இரங்கநாதன்.

தூயி தசமப்பகுப்புத் திட்டம்
தூயியின் பகுப்பு முறை 1876 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பகுப்பு முறையாகும். படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த தூயியின் பகுப்பு முறை தற்போது 22 ஆவது பதிப்பை வெளியிட்டுள்ளது.

தூயி தசமப்பகுப்புத் திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அராபிய எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எண் கட்டுமானம் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் பொருட்துறைகள் பிரதான பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. 10 பிரிவுகளும் 10 உபபிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உப பிரிவுகளும் மேலும் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் மூன்று இலக்கங்களிலும் முதலாவது இலக்கம் பிரதான வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இரண்டாவது இலக்கமானது பிரதான வகுப்பின் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. மூன்றாவது இலக்கமானது உப பிரிவுகளில் உள்ளடங்கும் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

குறிப்பிட்ட ஆவணத்திற்கு முழுமையானதும் விரிவானதுமான வகுப்பெண்ணைக் கொடுக்கும் பொருட்டு மூன்றாவது இலக்கத்துக்கு அடுத்ததாகத் தசமப் புள்ளிக்கு அடுத்ததாக எந்தவொரு வகுப்பெண்ணும் பூச்சியத்தில் முடிவடையக் கூடாது என்பதையும் வகுப்பெண் ஆகக் குறைந்தது மூன்று இலக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

Total : 151,171 | Total : 5,512,897

Type of Documents : Project Noolaham [115,698] Multimedia Archive [35,173] சுவடிகள் [678]

Reference Resources : Key Words [125] Organizations [1,879] People [3,353] Portals [25]

Information Resource Type : Books [18,715] Magazines [16,809] Newspapers [67,457] Pamphlets [1,330] சிறப்பு மலர்கள் [6,896] நினைவு மலர்கள் [2,308] அறிக்கைகள் [2,282]

Categories : Authors [8,392] Publishers [6,742] Year of Publication [238]

Special Collections : Muslim Archive [2,826] | Upcountry Archive [1376] | Women Archive [1706]

Sister Projects : Pallikoodam - Open Educational Resources [15,923] | Project Vaasihasaalai [59] | Early Tamil Works [2959]

Special Collections : Project Kilinochchi Documentation [1841] | {{{2}}} [1848] | {{{2}}} [400]

Sister Projects : Panchangam Documentation [58] | Jaffna Public Library Digitaization [2,817] | {{{2}}} [274] | {{{2}}} [2,564] | Tamil Manuscripts [678] |

Sister Projects : Project WERC [116] | International Centre for Ethnic Studies [148] | Jaffna University Community Medicine [46] | Jaffna Newspapers [34,758] | Ariyalai [441] | Mallikai [442] | Uthayan [13,375] | Jaffna Prostestant Documentation [324] | Jaffna University Library [10,669] | Project Evelyn Ratnam [2596] | Caste in Sri Lanka [115] | Multimedia Archive [1129] | Tamil Documentation Conference 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க