பகுப்பு:அமுதநதி

From நூலகம்

இவ்விதழானது வவுனியா இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த வன்னியூர்க் கவிராயர் எனப்படும் எஸ்.என். சவுந்தரநாயகம் எனும் புகழ் பெற்ற கலைஞனின் நினைவாகவும், அவர் வெளியிட நினைத்த 'அமுத கங்கை' எனும் கவிதைதொகுதியின் நினைவாகவும் ' அமுதநதி' எனும் பெயர் கொண்டு 2017 இல் இருந்து கலை இலக்கிய சமூக காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதன் அசிரியராக அ. நெலோமி அவர்கள் காணப்படுகின்றார். இதனை வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப்பேரவையினர் வெளியிடுகின்றனர். 2020 இல் ஏற்பட்ட கொடுந்தொற்று அசாதாரண சூழ்நிலையால் இதழின் வருகை தடைப்பட்டு மீண்டும் 2021 ஆம் ஆண்டு வெளிவருகின்றது. இது வரையான காலங்களில் மொத்தம் 09 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதன் உள்ளடக்கங்களாக கலை, கலாசார நிகழ்வுகள், அனுபவக்கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், கவிதைகள் என பல வாறான இலக்கிய முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றன. தொடர்புகளுக்கு - வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப்பேரவை, இலுப்பைக்குளம், நேரியக்குளம், வவுனியா. தொலைபேசி - 0776231859

Pages in category "அமுதநதி"

The following 5 pages are in this category, out of 5 total.