பகுப்பு:அர்ச்சுனா

From நூலகம்

'அர்ச்சுனா' இதழ் உதயன் வெளியீட்டகத்தின் மாதாந்த சிறுவர் இலக்கிய வெளியீடாகும். இதழின் வெளியீடு 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1990களில் தடைப்பட்டு 2011இல் மீள ஆரம்பிக்கப்பட்டு 2012வரை தொடர்ந்தது.

சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கு வழிகாட்டுவதாய் அமைந்த இவ் இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் துணுக்குகள், விஞ்ஞான கதைகள், மாணவர் கையெழுத்துப் பிரதிகளின் அறிமுகம், பாடசாலைகளின் வரலாறு, விளையாட்டு செய்திகள் என்பவற்றுடன் மாணவர்களது ஆக்கங்களையும் தாங்கியதாக வெளிவந்தது.