பகுப்பு:ஆற்றல்

From நூலகம்

'ஆற்றல்' எனும் இதழ் 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியத்தின் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த அறிவியல் மேம்பாட்டு மாத இதழ் ஆகும்.

போர்ச்சூழலிலும் இளையோர் மத்தியில் ஆற்றல் மேம்பாட்டிற்கான அறிவியலை கொண்டுசேர்க்கின்ற பெரும் பங்கினை இவ் இதழ் வகித்திருந்தது. இதழின் உள்ளடக்கத்தில் சமகால சர்வதேச செய்திகள், அறிவியல் சார் கட்டுரைகளையும், மாணவர்களுக்கான கல்விசார் கட்டுரைகளையும், பொதுஅறிவுத் துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.