பகுப்பு:எக்ஸில்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:26, 1 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

"எக்ஸில்” 1990களின் பிற்பகுதியில் பிரான்சிலிருந்து வெளிவந்த காலாண்டு இலக்கியச் சிற்றிதழ். எக்ஸில் வெளியீட்டகத்தின் குறிப்பிடத்தக்க ஓர் வெளியீடு இதுவாகும். இவ் வெளியீட்டில் முதல் மூன்று இதழ்களிலும் கலைச்செல்வன், ஜெபா.லக்ஸ்மி, ஸ்டாலின், விஜி, கற்சுறா ஆகிய 6 பேர் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஆசிரியர் குழவில் நிகழ்ந்த முரண்பாடுகளால் நான்காவது இதழ் இரண்டு வேறு வேறு இதழ்களாக வெளிவந்தது. நான்காவது இதழில் இருந்து ஜெபா, விஜி, ஸ்டாலின், கற்சுறா ஆகியோர் ஆசிரியர்களாக கடமையாற்றினார்கள். அதன் தொடர்ச்சியில் 13 இதழ்கள் 2003 காலவரை வெளிவந்தன. உள்ளடக்கத்தில் ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் மாற்று வடிவங்களையும் புதிய கதை சொல்லல் முறைமைகளையும் முன்வைத்ததுடன் விமர்சனம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தி இருந்தது “எக்ஸில்”.

"எக்ஸில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எக்ஸில்&oldid=435346" இருந்து மீள்விக்கப்பட்டது