பேச்சு:பாவலர் சரித்திர தீபகம் 2

From நூலகம்


நூல்விபரம் (முதலாம் பதிப்பு)

தமிழ்ப்புலவர்களின் சரிதங்களைத் தொகுத்துக் கூற எழுந்த முதனூலும் தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப்புலவர் சரித்திர நூலும் ஈழத்தவரால் இயற்றப்பெற்று ஈழத்திலேயே வெளியிடப்பெற்றவையாகும். இவற்றிலே முன்னையது கற்பிட்டி சைமன் காசிச்செட்டி (1807-1860) ஆங்கிலத்தில் எழுதி 1859இல் வெளிவந்த “தமிழ் புளுராக்” ஆகும். பின்னையது அ.சதாசிவம்பிள்ளை (1820-1895) எழுதி 1886இல் வெளியிட்ட பாவலர் சரித்திர தீபகமாகும். பாவலர் சரித்திர திபகத்திலே 410 அறிஞர்களுடைய வரலாற்றுச் செய்திகள் இடம்பெறுகின்றன. இவர்களில் 82பேர் ஈழத்தவர்களாவர். அகஸ்தியர் முதல் ஒளவையார் வரை முதலாம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. பலருடைய வரலாறுகள், ஆக்கங்கள் முதலியன பிற ஆதாரங்களாகப் பெற முடியாதவை. இந்நூல் மூலநூலின் புகைப்பிரதிப் பதிப்பாகும். (இந்நூலின் 1886ம் ஆண்டுக்கான முதற்பதிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சுவடிகள் காப்பகப் பதிவிலக்கம் 102113).


பதிப்பு விபரம்


பாவலர் சரித்திர தீபகம். அ.சதாசிவம்பிள்ளை (J.R.Arnold). வட்டுக்கோட்டை: அ.சதாசிவம்பிள்ளை, தமிழ் ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, 1886. (மானிப்பாய்: ஸ்திறாங் அஸ்பரி இயந்திரசாலை). viii, 268 பக்கம், விலை: ரூபா க.ரு0 (ரூபா 1.20), அளவு: 21 * 14 சமீ.

பாவலர் சரித்திர தீபகம். அ.சதாசிவம்பிள்ளை (J.R.Arnold). புதடில்லி: ஏசியன் எடுகேஷன் சர்விஸஸ், C-2/15, S.D.A., 3வது பதிப்பு, 1994. 1வது பதிப்பு, 1886, 2வது AES மறுபதிப்பு, 1984. (டெல்லி 110051: சவுத்திரி ஓப்செட் புரோசஸ்). viii, 268 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 * 14.5 சமீ., ISBN: 81-206-0031-2.

-நூல் தேட்டம் (# 3946)

நூல்விபரம் (மீள் பதிப்பு, பகுதி 1)

யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழாசிரியரும் உதயதாரகை பத்திரிகையாசிரியருமான J.R.Arnold என்ற அர்னோல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று The Galaxy of Tamils Poets என்ற ஆங்கில மாற்றுத் தலைப்புடன் 1886இல் மானிப்பாய் Strong & Asbury Printers அச்சகத்தினரால் அச்சிடப்பெற்ற மூலநூலை 1975இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி பொ.பூலோகசிங்கம் அவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்திருந்தார். அதன் மீள்பதிப்பு இதுவாகும். இந்நூல் தமிழ்ச்சங்க வெளியீட்டுத் தொடர் இலக்கம் 2 ஆக வெளிவந்துள்ளது. தமிழ் வளர்த்த பாவலர்கள் 87 பேரின் வாழ்வும் பணியும் சுருக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பதிப்பு விபரம்

பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57ம் ஒழுங்கை, 2வது பதிப்பு, மே 2001, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: ரெயின்போ அச்சகம்). xxviii, 240 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21 * 14 சமீ., ISBN: 955-8564-03-6.



யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழாசிரியரும் உதயதாரகை பத்திரிகையாசிரியருமான J.R.Arnold என்ற அர்னோல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று The Galaxy of Tamils Poets என்ற ஆங்கில மாற்றுத் தலைப்புடன் 1886இல் மானிப்பாய் Strong & Asbury Printers அச்சகத்தினரால் அச்சிடப்பெற்ற மூலநூலை 1975இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி பொ.பூலோகசிங்கம் அவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்திருந்தார். தமிழ் வளர்த்த பாவலர்கள் 87 பேரின் வாழ்வும் பணியும் சுருக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (முன்னைய பதிவிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2894)

பதிப்பு விபரம்

பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57ம் ஒழுங்கை, மீள் பதிப்பு, தை 1975, 1வது பதிப்பு, 1886. (கொழும்பு 13: ரெயின்போ அச்சகம், 231 ஆதிருப்பள்ளித் தெரு). xxviii, 240 பக்கம், விலை: குறிப்படப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ.


-நூல் தேட்டம் (# 2894)