ஆளுமை:செல்வி, திருச்சந்திரன்

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 3 மார்ச் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வி, திருச்சந்திரன்
தந்தை ஹன்டி பேரின்பநாயகம்
தாய் அமிர்தாதேவி
பிறப்பு 1940.10.21
ஊர் மானிப்பாய்
வகை பெண்ணிய ஆய்வாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Selvithiruchchanthiran.jpg

செல்வி, திருச்சந்திரன் (1940.10.21 -) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த பெண்ணிய ஆய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை ஹன்டி பேரின்பநாயகம்; தாய் அமிர்தாதேவி. இவர் இலங்கை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் செயற்திட்ட பெண்ணின் குரல் தமிழ் ஆங்கில இதழ்கள், தெற்காசிய பெண்ணிய ஆய்வு முன்னணி ஆசிரியர் குழு ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை ஆற்றி வந்தார். மற்றும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராகவும் நிவேதினி சஞ்சிகையின் ஆசிரியராகவும் கிழக்கு பல்கலைக்கழக அதீதியாகவும் தெற்காசிய பெண்ணிய ஆய்வு முன்னணி வெளியிடும் சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வரும் செல்வி திருச்சந்திரன் அவர்கள், பெண்ணியம் சார்ந்த பல்வேறு அமைப்புகளிலும் செயற்பாடுகளிலும் முக்கிய பொறுப்புகளை ஆற்றி வருகிறார். அவற்றில் சில. இலங்கையில் சமாதானத்திற்கான பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர் இலங்கையின் அரச சார்பற்ற பெண் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினர். தென்னாசிய பெண்ணிய ஆய்வாளர்களின் மன்ற இயக்குனர் இலங்கை சமூக விஞ்ஞான சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் இலங்கை சமூக விஞ்ஞான சங்கத்தின் வெளியீடகிய பிரவாத (தமிழ்) வெளியீட்டின் ஆசிரியர் குழு உறுப்பினர். பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தென்னாசியாவுக்கான பெண்கள் ஆய்வு மையத்தின் நிர்வாக உறுப்பினர்.

பெண்களின் உரிமைகள், கடமைகளை உணர்த்துவதற்காக வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் உள்ள பின்னடைந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கான வதிவிடச் செயலமர்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வரும் செல்வி அவர்களின் முயற்சியால், அநேக பெண்கள் பயனடைந்து வருவது கண்கூடு. பெண்களின் உரிமைகள், மேம்பாட்டுச் செயற்பாடுகள், அபிவிருத்திகள் பற்றி, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அநேக மகாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கு பற்றியுள்ள செல்வி அவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது. இலங்கை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பெண்கள் கூட்டமைப்பு, ‘வேலை வாய்ப்பற்ற கலைப் பெண் பட்டதாரிகள்’ செயற்திட்டம் ‘பெண்ணின் குரல்’ தமிழ் ஆங்கில இதழ்கள், முதலிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்த செல்வி அவர்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும், மிகுந்த புலமையுள்ளவர். இருமொழிகளிலும் பெண்ணியம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவையாவன Women's Writings in Sri Lanka. Vijitha Yapa Publications, Colombo. Stories From the Diaspora: Tamil Women Writing. Vijitha Yapa Publications, Colombo. Spectrum of Femininity; A Process of Deconstruction. Vikas Pub. House, Colombo. Ideology, Caste, Class and Gender. Vikas Pub. House, Colombo. Writing Religion: Locating Women. பெண்களின் வாய்மொழி இலக்கியம் தாலாட்டு, ஒப்பாரி பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு. Socialist Women of Sri Lanka. Young Socialist Publication, Colombo. A Pot-pourri of Debates, Dialogue, and a Discourse. Women's Education and Research Centre, Colombo. The Politics of Gender and Women's Agency in Post-Colonial Sri Lanka. WERC Publication, Colombo. Women, Narration, and Nation: Collective Images and Multiple Identities. WERC Publication, Colombo.

புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்- ஒரு ஆய்வு தொகுப்பு. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு. The Spectrum of Femininity: A Process of Deconstruction. WERC Publication, Colombo. Women's Movement in Sri Lanka: History, Trends, and Trajectories. Social Scientists' Association, Colombo. The politics of gender and women's agency in post-colonial Sri Lanka. Women's Education and Research Centre, Colombo. Patriarchal World View of Hinduism in Sri Lanka. Women's Education and Research Centre, Colombo. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு. குமரன் புத்தக இல்லம் , கொழும்பு. பெண்ணுரிகைகளின் பரிமாணங்களும் பெண்ணடிமையின் விளக்கமும். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு. சமூக விஞ்ஞான கருத்தியலில் பால்நிலைப்படு. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு. பெரியாரின் உரைகளில் சாதி, வர்க்க, பால்வகை வேறுபாடுகள். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

நிவேதினி சஞ்சிகையில் அவர் எழுதியுள்ள பெண்ணிய ஆய்வு கட்டுரைகள் பல. அவற்றில் சில பின்வருமாறு. யாழ்ப்பாண சமூகத்தின் கருத்தியலும் கட்டமைப்புகளும் நிர்ணயிக்கும் பால் நிலைப்பாடு. பால்நிலைச் சமத்துவத்துக்கும் மரபுவழி நோக்கலுக்கும் உள்ள சில முரண்பாடுகள் முற்போக்குவாத, தேசிய பால்நிலை உருவாக்கங்களும் அவற்றின் முரண்பாடுகளும் பக்தியின் மறுபக்கம் பெண்களின் மறுதலிப்புக்களா? தேசவழமைச் சட்டத்தில் சமூகப் பரிமாணங்களும் யாழ்ப்பாணப் பெண்களின் சமூக பங்கு. மனித உரிமைக்கல்வியும் பெண்களை ஆக்கவலுவாக்கலும் Feminine Speech Transmissions: An Exploration Into the Lullabies and Dirges of Women

வரலாற்றையும் மானிடவியலையும் இணைத்து, பெண்ணிலை நோக்கில் இவர் மேற்கொண்டு வரும் ஆய்வு முயற்சிகள், சமுதாயத்தில் பொதுவாக பெண்கள் சமுதாயத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. பெண்ணியம் சார் சகல விவாதங்களுக்கும் சரியாக பதிலளிக்கும் கலாநிதி செல்வி அவர்கள் சிறந்த ஆய்வாளரும் கூட . பெண்கள் கல்வியை ஊக்குவிப்பதிலும் அது சார்ந்து செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் இவரது பங்கு அளப்பரியது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

செல்வி திருச்சந்திரன் பற்றி தமிழ் விக்கிப்பீடியவில்

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 17-25
  • நூலக எண்: 10858 பக்கங்கள் 03-06