ஆளுமை:ஜுலியானா ஷாந்தனி, ஜோன்பிலிப்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:28, 6 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜுலியானா ஷாந்தனி
தந்தை எம்.எஸ்.ஆர்.ஜோன்பிலிப்
தாய் மரியம்மா
பிறப்பு
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜுலியானா ஷாந்தனி, ஜோன்பிலிப் கண்டியில் பிறந்த கலைஞர். இவரது தந்தை எம்.எஸ்.ஆர்.ஜோன்பிலிப்; தாய் மரியம்மா. வட்டவளை தமிழ் வித்தியாலயம், கண்டி மோவ்பெரி கல்லூரி, ஹட்டன் ஹைலண்ட் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற கலைஞர். கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூகவியல் கற்கை நெறியைத் தொடர்கிறார். கலைத்துறைக்கு அப்பால் உள்ளக வடிவமைப்புத்துறையில் துறையில் ஈடுபாடுள்ள ஜுலியானா சிங்கப்பூர் றபள்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ளக வடிவமைப்புத்துறையில் சான்றிதழ் பெற்றிருக்கிறார். இலங்கை குடிவரவு சேவை விண்ணப்ப செயல்முறை மற்றும் நிர்வாகத்திலும் 10 வருட கடமையாற்றிய அனுபவம் உள்ளவர். சுவீடன் துணைத் தூதரகம் - இலங்கை தூதரக உதவியாளராகவும், பிலிப்பைன்ஸ் குடியரசின் தூதரகம் - இலங்கை தூதரக உதவியாளரகவும் தொழில் ரீதியிலான அனுபத்தை கொண்டுள்ள இவர் தற்போது ஒரு சர்வதேச பல்கலைக்கழக மையத்திற்கு விசா ஆலோசனை அலுவலராக பணிபுரிகிறார். இராஜதந்திர பயணங்கள் மற்றும் அரசாங்கங்கள் பங்களிப்பு, தீர்வுகள் வழங்குதலில். ஒரு அலுவலராக – செயல்பட்டிருக்கிறார் (இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்). சர்வதேச மனிதஉரிமைகள் பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி பயிற்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிலும் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ-அலைவரிசையில் 2000ஆம் ஆண்டு முதல் பகுதி நேர நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமையாற்றுகிறார்.அத்து்டன் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளருக்குரிய பயிற்சியையும் நிறைவுசெய்திருக்கின்றார். 1996 மேடை நாடக நடிகையாக இருந்து வரும் ஜுலியானா 2005ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமாகியுள்ளார் ஆனால் இந்த நாடகம் ஒளிபரப்பப்படவில்லை. ரூபவாஹினிக்கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர் நாடகமாக கம்பிட்டவில என்னும் சிங்கள நாடகத்தின் ஊடாக மீண்டும் இவர் நடிக்க ஆரம்பித்தார். இலங்கையில் 2016ஆம் ஆண்டு வெளியான கோமாளி கிங்ஸ் என்னும் இலங்கைத் தமிழ்த் திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்துள்ளார் ஜுலியானா. தேகிந்த கோங்காககேயின் இயக்கத்தில் கிரிவெசிபுர மும்மொழி திரைப்படத்திலும் பிரதான கதாபாத்திரமேற்று நடித்துள்ளார். தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றிலும் நடித்துள்ளதோடு விசேட தினங்ளிலும் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு ஜுலியானா ஷாந்தனி, ஜோன்பிலிப் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.