ஆளுமை:திலகவதி, அருளானந்தம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:15, 25 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திலகவதி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திலகவதி
தந்தை நற்குணம்
தாய் கனகம்மா
பிறப்பு 1963.04.28
ஊர் முள்ளியவளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திலகவதி, அருளானந்தம் முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நற்குணம்; தாய் கனகம்மா. ஆரம்பக் கல்வியை முள்ளியவளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியிலும் கற்றார். உயர் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். இசை ஆசிரியராகவும் தனது பணிகளை ஆற்றி வந்துள்ளார். அக்காலக் கட்டத்தில் இப் பிரதேச முதுபெரும் கலைஞர்களான சுப்பர் கணபதிப்பிள்ளை, சிவநேசன், கந்தையா அருணா செல்லத்துரை, சு.வெற்றிவேலு போன்றவர்களால் இயல் இசை நாடகக் கலாமன்றம் எனும் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டு பல தரப்பட்ட கலைகளை வளரக்கும் அரிய பணியில் அயராது உழைத்தனர். யாழ் நகரிலிருந்து இசைக் கலைஞர்களை அழைத்து வந்து இப் பிரதேசத்தைச் சேர்ந்த சகல கலைஞர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. மாதாந்த கலை விழாக்களும் இடம்பெற்றன. இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு மேடை ஏற்றப்படும் நிகழ்ச்சிகளில் திகவதியாரும் பங்கேற்று வந்துள்ளார். இசை, நடனம், நாடகங்கள், பேச்சு,கவிதை, வில்லுப்பாட்டு என பன்முகத்திறமைகளை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

1963ஆம் அண்டு திரு.சூரி பொன்னையா அண்ணாவியார், அரியான் பொய்கை செல்லமுத்து அவர்களின் நாடகக் குழுவில் இணைந்து சம்பூர்ண அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி, கீர்த்தி மாதவி போன்ற பாத்திரங்களையேற்றுப் பாடி நடித்துள்ளார். அந் நாடகங்கள் முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஏனைய மாவட்டங்களிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளன.

முள்ளியளையின் பாரம்பரிய நாட்டுக்கூத்தான கோவலன் நாட்டுக்கூத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக மாதவி பாத்திரம் ஏற்று நடித்துப் பின் அண்ணாவியராகவும் செயற்பட்டு மாதவி நற்குணம் என அன்பாக அழைக்கப்பட்ட அருணாசலம் நற்குணம் என்பவரின் மகள் என தன்னை அடையாளப்படுத்துகிறார் திலகவதி. இவரின் குடும்பம் முழுவதுமே கலைக்குடும்பமாகும். தந்தையாரும் சகோதரர்களும் இசை நாடக நாட்டுக்கூத்து ஈடுபாடுடைய கலைஞர்கள். இதன் காரணமாக திகலவதியும் சிறு வயதிலிருந்தே இயல் இசை நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

நடனம், நாடகம், கதாப்பிரசங்கம், நாட்டாரியல், நாட்டுக்கூத்து, இசை நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலை வடிவங்களில் ஆர்வங்கொண்டவர். கல்வி கற்கும் போது பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை தனதாக்கி அவரது கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர். இவரின் கலைப் பயணத்திற்கு பெரும் உந்து சக்தியாக புவனா ஐயம்பிள்ளை அவர்களை நினைவுகூருகிறார்.

இப்பிரதேசத்திற்குரிய கோவலன் நாட்டுக்கூத்தை பிரபல ஊடகவியலாளர் அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டபோது கோப்பெருந்தேவி பாத்திரத்திற்கு குரல் கொடுத்து பெரும் பாராட்டை திகலவதி பெற்றார். 1074ஆம் ஆண்டு அகில இலங்கை நாடக விழாவின் போது கோவலன் நாட்டுக் கூத்து கொழும்பு லும்பினி மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. பேராசிரியர் சு.வித்தியானந்தன், திரு.அருணா செல்லா போன்றோரின் நெறியாள்கையில் பங்கு கொண்ட இந் நாட்டுக்கூத்து முதலாமிடத்தையும் பாராட்டையும் சான்றிதழ்களையும் பெற்றதால் இவர்களின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அது பெருமையைத் தேடித் தந்ததாகக் குறிப்பிடுகிறார் கலைஞர் திலகவதி.

1976-1980 காலப் பகுதியில் யாழ் பல்கலைக்கழக நுண்களைப் பீட இசைத் துறைக்குத் தெரிவாகிச் சென்று கற்கை நெறியை தொடர்ந்துள்ளார். வயலின், பண்ணிசை, நாட்டுக்கூத்து ஆகியவற்றை கற்று 1981ஆம் ஆண்டு இசைக் கலைமணிப் பட்டத்தை பெற்றார். யாழ் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்டு வரும் சங்கீதப் பரீட்சையில் ஆசிரியர் தரம் வரை சித்தியடைந்து சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றார்.

இவர் கல்வி பயின்ற பாடசாலையான மு/வித்தியானந்தக் கல்லூரியில் 1984ஆம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். இவரினால் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் வருடந்தோறும் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

இசை, நடனம்,நாடகங்கள், இசை நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து, நெறியாள்கை செய்வதோடு அவற்றில் இடம்பெறும் பாடல்களுக்கு இவரே இசையமைத்தும் உள்ளார். பாடசாலையின் அமுதவிழா, வைரவிழா மலர்களுக்கு இசை தொடர்பான ஆக்கங்களை எழுதியுள்ளார். கல்வி பொது தராதரப் பரீட்சை பிள்ளைகளை ஆயத்தம் செய்யும் வகையில் வினா விடை தொகுப்பு பகுதி I பகுதி II நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற பின்னரும் முள்ளியவளை அறநெறி பாடசாலையின் பொறுப்பாசியராகவும் பண்ணிசை சமய ஆசிரியராகவும் இருந்து தனது சமூக சேவையை மேற்கொண்டு வருகிறார்.

விருதுகள்

இந்து கலாசார அமைச்சினால் காட்டா விநாயகர் அறநெறிப் பாடசாலைக் கால மேன்மை விருது – 2016.

இந்து கலாசார அமைச்சினால் காட்டா விநாயகர் அறநெறிப் பாடசாலை நல்லாசிரியர் மேன்மை – 2018.

அகில இன நல்லுறவு ஒன்றிய மேன்மை சமஸ்ரீ விருது- 2017 கலாகீர்த்தி சிறப்பு விருது.

மாவட்ட அரசாங்க அதிபரினால் சர்வதேச மகளிர் தின மேன்மை விருது 2018.

கலைமாமணி விருது.

கரைதுரைப்பற்று பிரதேசத்தின் கலைத்துறைவளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கியமைக்காக முல்லைப் பேரொளி விருது.


குறிப்பு : மேற்படி பதிவு திலகவதி, அருளானந்தம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.